Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

23,408 மின்சார ஸ்கூட்டர்கள் விற்று, FY22-ல் ரூ.408 கோடி வருவாய் பெற்ற Ather Energry!

23,408 மின்சார ஸ்கூட்டர்கள் விற்று, FY22-ல் ரூ.408 கோடி வருவாய் பெற்ற Ather Energry!

Thursday July 14, 2022 , 2 min Read

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான Ather Energy மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.408 வருவாய் பெற்றதாக அறிவித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘ஏதர் எனர்ஜி’ கடந்த நிதியாண்டில் அதாவது, fy21ல் ரூ.79 கோடி வருவாயை பதிவு செய்திருந்து நிலையில், இந்த fy22ல் ரூ.408 கோடி வருவாயை பதிவு செய்து 5 மடங்கு உயர்வை பெற்றுள்ளது.

ஆனால், நிறுவனத்தின் இழப்புகள் ஆண்டுக்கு 47% அதிகரித்து ரூ.344 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இழப்பு ரூ.233.3 கோடியில் இருந்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை யூனிட்களை பொறுத்தவரை Ather, FY22 இல் 23,408 யூனிட் மின்சார ஸ்கூட்டர்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது 21ஆம் நிதியாண்டில் 5,523 யூனிட்களிலிருந்து 4.2 மடங்கு அதிக விற்பனையாகும்.

Ather Energy

Top End Model ஆன Ather 450X ஏதரின் மொத்த விற்பனையில் அதிக யூனிட்களில் அதாவது, 81% விற்பனையை கொண்டிருந்தது, மீதமுள்ள 19% Ather 450 பிளஸ் மாடல் விற்பனையை கொண்டிருந்தது. இது பிரீமியம் ஸ்கூட்டர் வாங்குபவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது தெரியவந்துள்ளது.

வருவாயில் சேவைகள் விற்பனையின் வருவாயும் அடங்கும், இது 81.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.6 கோடியிலிருந்து ரூ.2.9 கோடியாக உள்ளது. 

கடந்த ஆண்டு, ஏதர் எனர்ஜி ஒன்பது நகரங்களில் உள்ள ஒன்பது கடைகளில் இருந்து 28 நகரங்களில் 34 சில்லறை அனுபவ மையங்களாக விரிவடைந்தது. அதன் சில்லறை வணிக நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 51 சதவீதம் தென்னிந்தியாவில் உள்ளது, அதைத் தொடர்ந்து மேற்கு (21 சதவீதம்), வடக்கு (20 சதவீதம்) மற்றும் கிழக்கு இந்தியா (9சதவீதம்) உள்ளது. 

இந்த நகரங்கள் அடுக்கு I, II மற்றும் III நகரங்களின் ஆரோக்கியமான மார்க்கெட்டை கொண்டுள்ளன, சிறிய நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, Ather அதன் ஓசூர் தொழிற்சாலையில், ஆண்டுக்கு 1.20 லட்சம் வாகனங்களில் இருந்து நான்கு லட்சம் வாகனங்களாக உற்பத்தியை உயர்த்தியுள்ளது. மேலும், அதன் அருகே மற்றொரு உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. 

இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை, EV உற்பத்தியைத் தவிர, லித்தியம்-அயன் பேட்டரி (lithium-ion battery) தயாரிப்பிலும் கவனம் செலுத்தும். 

Ather Energy

Ather Energy

மேலும், ஏதர் அதன் இரண்டாம் தலைமுறை வேகமான சார்ஜிங் அமைப்புகளையும் அறிமுகப்படுத்தியது. இது முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது சார்ஜிங் வேகத்தை 50 சதவீதம் அதிகரிக்கும். 

Ather Energy FY22 இல் 203 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது, 28 நகரங்களில் மொத்த சார்ஜிங் நிறுவல்களின் எண்ணிக்கையை 351 ஆகக் கொண்டு சென்றது.

"ஒட்டுமொத்த ஸ்கூட்டர் துறையில் EV ஸ்கூட்டர்களின் ஊடுருவல் மார்ச் 2022 உடன் Q4 FY22 இல் 11 சதவீதத்தை எட்டியது. இது 12.5 சதவீத ஊடுருவலைத் தொட்டது. இது தொழில்துறை கணிப்புகளை விட வேகமாக உள்ளது. இருப்பினும், சப்ளை பக்கத்தின் கண்ணோட்டம் கணிக்க முடியாத வகையில் சவாலாக உள்ளது. இதற்கு பேட்டரி செல்கள் மற்றும் சிப்ஸ்-களின் பற்றாக்குறையே இரண்டு முக்கியக் காரணிகளாகும். இதுவே எதிர்காலக் கவலையாக இருப்பதாக," நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில்: ஐஸ்வர்ய லட்சுமி