சமபங்கு தொடர்ச்சி நிதி முதலீடுகள் செய்ய ரூ.300 கோடி உயர்த்தியது Anicut Capital!
முன்னணி முதலீட்டு நிறுவனம் அனிகட் கேப்பிடல், அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் பொது பங்கு வெளியீட்டிற்கு தயாராகும் அதிக வாய்ப்புள்ள நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் இந்த நிதியை உருவாக்கியுள்ளது.
முன்னணி முதலீட்டு நிறுவனம் 'அனிகட் கேபிடல்', ரூ.300 கோடி மதிப்பிலான தனது பிந்தைய நிலை சமபங்கு தொடர்ச்சி நிதியை (late-stage equity continuum fund) உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் பொது பங்கு வெளியீட்டிற்கு தயாராகும் அதிக வாய்ப்புள்ள நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து தற்போது நிறுவனம் தனது நிர்வாகத்தின் கீழ் அனைத்து நிதிகளையும் உள்ளடக்கிய வகையில் ரூ.3,000 கோடியை கொண்டுள்ளது.
அனிகட் சம்பங்கு தொடர்ச்சி நிதி, நிறுவனத்தின் முதலீடு கொள்கையை பிரதிபலிக்கிறது. தீவிரமான தேர்வு நிலைக்கு பிறகு இந்த நிதி, வளர்ச்சி வாய்ப்பு, லாப நிலை, ஐபிஓ தயார் நிலையை கொண்ட 5-6 நிறுவனங்களில் முதலீடு செய்யும். அனிகட் சார்ந்த சூழலுக்குள் தேர்வு செய்யப்படும் இந்த நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலான காலத்திற்கு நீண்ட கால உறவு கொண்டிருக்கும்.
"ரூ.300 கோடி ரூபாய் அளவிற்கு அனிகட் equity continuum fund உயர்த்தி பூர்த்தி செய்ததில் உற்சாகம் கொள்கிறோம். முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தியாவின் துடிப்பான தொழில்முனைவு சூழல் மற்றும் பல்வேறு நிலைகளில் வர்த்தக நிறுவனங்களை ஆதரிக்கும் எங்கள் நோக்கத்தை இந்த நிதி உணர்த்துகிறது,” என்று நிறுவன இணை நிறுவனர், நிர்வாக பங்குதாரர் அஸ்வின் சத்தா கூறியுள்ளார்.
அனிகட் கேபிடல் ரூ.1,200 கோடி முதல் 1,500 கோடி வரையான தனது மூன்றாவது கடன் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுவரை, ரூ.400 கோடி அளவில் ஏழு ஒப்பந்தங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்குள் முழு நிதியும் முதலீடு செய்யப்பட உள்ளது. எஸ்.எம்.இ துறையில் வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து ஆதரிக்கும் நோக்கத்தை இது உணர்த்துகிறது. இதன் மூலம் துவக்கம் முதல் இதுவரை, தனியார் கடனாக ரூ.3200 கோடி மத்திய அளவு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2020ல் துவங்கிய ஏஞ்சல் நிதி, 60க்கும் மேலான வளர்ச்சி நிலை ஸ்டார்ட் அப்களில் ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது. சமபங்கு வளர்ச்சி நிதியில், 2023ல், 10க்கு மேற்பட்ட ஏ/பி சுற்று முந்தைய நிறுவனங்களில் ரூ.350 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
"எங்கள் மூன்றாவது நிதி நன்றாக செயல்படுகிறது. தனியார் கடன் மற்றும் ஆரம்ப நிலை புதுமையாக்கத்தின் விரிவாக்கமாக மூன்று நிதிகளை கிப்ட் சிட்டியில் உருவாக்கியுள்ளோம். முதல் அரையாண்டில் 100 மில்லியன் டாலர் நிதி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய அலுவலகமும் திறந்துள்ளோம்,” என்று நிர்வாக பங்குதாரரும், இணை நிறுவனருமான பாலமுருகன் கூறினார்.
கிப்டி சிட்டியில் 2022 நவம்பரில் செயல்படத்துவங்கிய பிறகு அனிகட் கேப்டல் மூன்று நிதிகளை துவக்கியுள்ளது.
Edited by Induja Raghunathan