Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்திய ‘ஐகான்’ ஆக மாறிய 7 சர்வதேச பிராண்டுகளின் சுவாரஸ்ய பின்னணி!

இந்திய மார்க்கெட்டில் நுழைந்து, வெளிநாட்டு நிறுவனங்களாக இல்லாமல் முழுக்க இந்திய நிறுவனமாகவே மாறிய 7 சர்வதேச பிராண்டுகளின் பின்புலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய ‘ஐகான்’ ஆக மாறிய 7 சர்வதேச பிராண்டுகளின் சுவாரஸ்ய பின்னணி!

Friday October 25, 2024 , 3 min Read

கோகோ கோலாவின் சிவப்பு டின் முதல் மெக்டொனால்ட்ஸின் காரமான மெக்ஆலூ டிக்கி வரை, சில சர்வதேச பிராண்டுகள் இந்திய மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்திய மார்க்கெட்டில் நுழைந்து, வெளிநாட்டு நிறுவனங்களாக இல்லாமல் முழுக்க இந்திய நிறுவனமாகவே மாறிய 7 சர்வதேச பிராண்டுகளின் பின்புலம் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. கோகோ கோலா - Coca Cola

இந்தியாவில் கோகோ கோலாவின் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு சற்றும் சளைத்தது அல்ல. அமெரிக்காவின் ஐகானிக் பிராண்ட் கோகோ கோலா. இது அனைவரும் அறிந்ததே. கோகோ கோலா, 1950-ம் ஆண்டே இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்துவைத்தது. அதுவும் பிரம்மாண்டமாக... ஆனால், 27 ஆண்டுகளில் கோகோ கோலா இந்தியாவை விட்டு வெளியேறியது. 1977-ம் ஆண்டில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் காரணமாக கோகோ கோலா இந்தியாவில் இருந்து வெளியேறியது.

coke

17 வருடங்களுக்கு பிறகு 1993-ல் கோகோ கோலா இந்தியாவில் ரீ என்ட்ரி கொடுத்தது. ஆனால் இம்முறை, வித்தியாசமாக, உறுதியாக நுழைந்தது. எப்படியெனில் தம்ஸ் அப், லிம்கா மற்றும் கோல்ட் ஸ்பாட் போன்ற பிரபல பிராண்டுகளை உருவாக்கிய இந்திய நிறுவனமான பார்லே குழுமத்தின் 60 சதவீத பங்குகளை கோகோ கோலா கைப்பற்றியது. அதன்பின், கவர்ச்சியான விளம்பரங்கள் கோகோ கோலாவை இந்தியா முழுவதும் பிரபலமான, அதேநேரம் இந்தியாவின் சொந்த பிராண்டாக மாறியது.

2. மேகி - Maggi

நெஸ்லே நிறுவனத்துக்கு சொந்தமான மேகி நூடுல்ஸ் 1983-ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியா உலகக் கோப்பை வென்ற ஆண்டு. அப்போது இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியுடன் ‘2 நிமிட நூடுல்ஸ்’ என்கிற தொலைக்காட்சி பிரச்சாரத்தை கையிலெடுத்த மேகி, அதனை சக்ஸ்ஃபுல் ஃபார்முலாவாக மாற்றியது. இதனால், இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பிரபலமாக சென்று சேர்ந்தது.

maggi

மேகி அறிமுகப்படுத்திய தனித்துவமான மசாலா, அதனை இந்திய டேஸ்டுக்கு ஏற்க வைத்தது. எனினும், மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கை தொடர்பாக இந்தியாவில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னடைவுகள் இருந்தபோதிலும், 2016-ல் வலுவான விளம்பரங்கள் மூலமாக மீண்டும் இந்திய மார்க்கெட்டில் முன்பைவிட ஆக்ரோஷமாக நுழைந்தது. இன்று, மாறிவரும் இந்தியர்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாக மேகி மாறியுள்ளது.

3. லேஸ் - Lays

இன்று பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான நொறுக்கு தீனி லேஸ் சிப்ஸ்தான். பெப்சியின் ஒரு பிரண்டான இந்த லேஸ், 1995-லேயே இந்திய மார்க்கெட்டில் வந்துவிட்டது. கண்ணைக் கவரும் பேக்கேஜிங் முறை, அதைவிட மலிவான விலை ஆகியவை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் லேஸை கொண்டுசேர்த்தது.

சில்லி லெமன், மேஜிக் மசாலா போன்ற சுவையான மசாலாக்கள் கலவையுடன், லேஸ் வெற்றிகரமாக இந்திய சிற்றுண்டி சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டது. அதேபோல், ரன்பீர் கபூர், சைஃப் அலி கான் மற்றும் எம்.எஸ்.தோனி போன்ற செலிபிரிட்டிகளை கொண்ட அதன் நகைச்சுவையான விளம்பரங்களும் லேஸ் பிரபலமாக பங்களித்தன.

4. க்ளோசப் - Close-up

யூனிலீவருக்குச் சொந்தமான டூத்பேஸ்ட் பிராண்டான 'க்ளோசப்' 1975-ஆம் ஆண்டில் தனது முதல் ‘ஜெல்-டூத்பேஸ்ட்’டை அறிமுகப்படுத்தியது. அந்த ஜெல் டூத்பேஸ்ட் இந்திய மார்க்கெட்டை உலுக்கிய என்றால் மிகையல்ல. க்ளோசப் சிவப்பு நிற ஜெல் டூத்பேஸ்ட் அக்கால பாரம்பரிய வெள்ளை நிற டூத்பேஸ்டில் இருந்து வேறுபட்டது.

ஃபிரஷ்ஷான சுவாசம், வெண்மையான பற்களுக்காக பெயர் பெற்ற க்ளோசப், பல இந்தியர்களுக்கு வாய் சுத்தத்துக்கான பராமரிப்பு பொருளாக மாறியது. இதோடு விளம்பரப் பிரச்சாரங்களும் கைகொடுக்க க்ளோசப் இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

5. கேட்பரி - Cadbury

பிரிட்டிஷ் பிராண்டான கேட்பரி (Cadbury), மொண்டலெஸ் இந்தியா நிறுவனம் மூலம் தனது சுவையான சாக்லேட்கள் மூலமாக இந்தியர்களின் இதயங்களைக் கைப்பற்றியது. 1948-ல் கேட்பரி இந்தியச் சந்தைக்கு வந்தபோது ஒரு முக்கிய சவாலை எதிர்கொண்டது. அது, அந்த நேரத்தில், பாரம்பரிய இந்திய இனிப்புகளே அதிகம் விற்பனையாகின. அவற்றை ஒப்பிடும்போது, சாக்லேட்டுகள் முக்கியமானதாக இல்லை. மேலும், பல உள்ளூர் சாக்லேட் பிராண்டுகளின் ஆதிக்கமும் இருந்தன.

cadbury

சந்தையில் ஒரு நிலையான இடத்தை உருவாக்க, கேட்பரி டெய்ரி மில்க், டெய்ரி மில்க் சில்க் போன்ற சாக்லேட்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக சின்ன சின்ன சந்தோசங்களை கொண்டாடுவதற்கு ஏற்ற சாக்லேட்டுகளை கொண்டுவந்தது. இதுதவிர உணர்ச்சிகரமான விளம்பரங்கள் இந்திய மக்களிடம் கேட்பரி வலுவான பிணைப்பை உருவாக்க வழிவகுத்தது.

6. ஹூண்டாய் - Hyndai

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் மாருதி, மஹிந்திரா மற்றும் டாடா போன்ற ஜாம்பவான் நிறுவனங்களைவிட எப்படி முன்னேற முடிந்தது? 1998-இல் ஹூண்டாய் தனது சான்ட்ரோ காரை அறிமுகப்படுத்திய பிறகு அதன் சாம்ராஜ்யம் உருவானது. சான்ட்ரோ மாடல் கார், இந்திய கார் பிரியர்களின் இதயங்களை விரைவாகவே வென்றது.

இதன்பின், Sonata, Getz மற்றும் Tucson போன்ற மாடல்களை வெளியிட்டாலும், ஹூண்டாய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 2007-ல் i10 மாடலை வெளியிட்ட போதுதான் அனைத்தும் மாறியது.

hundai

i10 சென்ஷேனாக விற்பனை ஆனது. அதன்பின், க்ரெட்டா, வென்யூ, எக்ஸ்சென்ட் என மற்ற பிராண்டுகளும் வெற்றியை தேடித்தர இந்தியாவில் பிரபலமான கார் பிராண்டாக ஹூண்டாய் மாறியது. பயணிகளின் பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக, ஹூண்டாய் இந்திய கார் பிரியர்களிடம் பிரத்யேக ஆதரவைப் பெற்றது.

7. மெக்டொனால்ட்ஸ் - McDonalds

அமெரிக்க பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ், 1996-ல் இந்தியாவுக்கு வந்தது. மார்க்கெட்டுக்கு வந்த சில காலங்களிலேய இந்திய சுவைக்கு ஏற்றவாறு தங்களின் மெனுவை சீரமைக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டது. மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி இந்தியாவில் அதிகமாக உட்கொள்ளப்படுவதில்லை என்பதால், மெக்டொனால்டு மெக்ஆலூ டிக்கி பர்கர் மற்றும் மெக்வெஜி போன்ற சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது. இது இந்தியர்களின் இதயங்களை வென்றது. மேலும், குறைவான விலையில் இந்திய சுவைக்கு ஏற்ற மசாலா டேஸ்டுடன் கொடுக்க மெக்டொனால்டு விரைவாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய உணவாக மாறியது.

தகவல் உறுதுணை: ஆஸ்மா கான்




Edited by Induja Raghunathan