ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய எரிபொருள் ஏற்றுமதி 58% அதிகரிப்பு!
சீனாவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவிடமிருந்து 37% எரிபொருட்களை இறக்குமதி செய்து இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய பெட்ரோல், டீசல் ஏற்றுமதி 2024-ம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் 58% அதிகரித்துள்ளது. இந்த பெட்ரோல் டீசலில் பெரும்பாலானவை தள்ளுபடி விலையில் ரஷ்ய சுத்திகரிப்புக் கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான படையெடுப்பையடுத்து, கிரெம்ளின் நிதிவலுவை முடக்க EU/G7 நாடுகள் டிசம்பர் 2022 இல் விலை வரம்பையும் அறிமுகப்படுத்தியதோடு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடையையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருள்கள் மீது தடை விதிக்கப்படவில்லை. இதனையடுத்தே, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தள்ளுபடி விலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோல் டீசல்களை அதிக அளவில் இறக்குமதி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவிடமிருந்து 37% எரிபொருட்களை இறக்குமதி செய்து இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபரில் மட்டும் 200 கோடி யூரோ மதிப்பிற்கு ரஷ்ய எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்நிலையில்தான், 2024ம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளின் ஐரோப்பிய யூனியனுக்கான பெட்ரோல் டீசல் ஏற்றுமதி 58% அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா கச்சா எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது, உக்ரைன் போருக்கு முந்தைய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எண்ணெயில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான கொள்முதல்கள் நாட்டின் மொத்த எண்ணெய் கொள்முதலில் கிட்டத்தட்ட 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விலை உச்சவரம்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவில் இருந்து வாங்குவதைத் தவிர்ப்பதன் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் மற்ற எண்ணெய்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் தள்ளுபடியில் கிடைத்தாலும் எரிபொருள் ஏற்றுமதியில் தள்ளுபடி விலை இல்லை, முழு விலையில்தான் ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஐரோப்பா பொதுவாக ஒரு நாளைக்கு சராசரியாக 1,54,000 பீப்பாய்கள் (பிபிடி) டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது. இது கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.