45 நாட்கள் பேமண்ட் ரூல் - MSME நிறுவனங்களைக் காக்க ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த புதிய முறையானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த புதிய முறையானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
45 நாட்கள் கால அவகாசம் ஏன்?
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், உலக அளவிலான டெண்டர்களுக்கு அனுமதி மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவை தொகைகளை 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதாவது, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் படி, உதயம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு, MSME தொழில்துறையில் இருந்து ஏதேனும் பொருட்களை வாங்கும், சேவையைப் பெறும் எந்தவொரு வாங்குபவரும், ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பு பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட தேதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் அல்லது நாளிலிருந்து 45 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
MSME நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன. அவ்வாறு பொருட்களை வாங்கும் பெரு நிறுவனங்கள் MSME நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திரும்ப செலுத்தாததால் அந்நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிறது. இதனை தடுக்கும் பொருட்டும்,MSME நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது.
MSME நிறுவனங்களுக்கான பயன்கள்:
இதன் மூலம் பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து 45 நாட்களுக்குள் பணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது, பெருநிறுவனங்கள் காலதாமதம் செய்யும் தொகைக்கு தற்போதுள்ள வங்கி வட்டி விகிதமான 6.75 சதவீதத்திலிருந்து மூன்று மடங்கு வட்டியுடன் MSME நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டும்.
மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடன் உதவி, மானியம் போன்றவற்றை விட MSME நிறுவனங்கள் தனியார்,அரசு மற்றும் பெரு நிறுவனங்களிடம் இருந்து விற்பனைக்கான பணத்தை பெருவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாக்கவுள்ள புதிய நடைமுறையால், MSME நிறுவனங்களின் நிதி நெருக்கடி குறைக்கப்படுவதோடு, மறுமுதலீடு செய்வது, உற்பத்தியை அதிகரிப்பது போன்ற தொழில் வாய்ப்புகளுக்கும் பயன்படும்.
இதனிடையே, இந்த 45 நாட்கள் கட்டண விதியை அமல்படுத்துவதை ஓராண்டு வரை ஒத்திவைக்கும்படி, அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.