அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனால் கெளரவிக்கப்பட்ட 17 வயது இந்திய வம்சாவளி இளம் பெண்!
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது பெண்ணான கீதாஞ்சலி ராவ், தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்துள்ள கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் கௌரவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது பெண்ணான கீதாஞ்சலி ராவை, அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் கௌரவித்துள்ளார்.
ஜில் பைடன் கெளரவிப்பு:
சர்வதேச பெண் குழந்தை தினத்தை கொண்டாடுவதற்காக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் "பெண்கள் முன்னணி மாற்றம்" (பெண்கள் முன்னணி சவால்) விழாவில் 17 வயதான கீதாஞ்சலி ராவ் இந்த கௌரவத்தைப் பெற்றார்.
வெள்ளை மாளிகையின் பாலின கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் கீதாஞ்சலியுடன் சேர்த்து மேலும் 14 இளம் பெண் தலைவர்களை அங்கீகரித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜில் பைடென்,
“வெள்ளை மாளிகையில் மாற்றத்தை வழிநடத்தும் இந்த அசாதாரண பெண் குழுவை சந்தித்தது எனக்கு கிடைத்த மரியாதை. இந்த இளம் பெண்களை பூமியை காப்பாற்றி பாதுகாத்ததற்காக பாராட்டினேன். இவர்கள் மனதை மாற்றும் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்,” என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த கீதாஞ்சலி?
அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி. போதைக்கு அடிமையாவது முதல் இணைய வழி மிரட்டல்கள் வரை பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு கண்டுள்ளார். நீரில் கலந்துள்ள மாசு தன்மை குறித்து அறிந்து கொள்ளக்கூடிய ’டெத்திஸ்’ என்ற கருவியை உருவாக்கியதற்காக EPA ஜனாதிபதி விருதையும், டிஸ்கவரி எஜுகேஷன் வழங்கும் அமெரிக்காவின் ’சிறந்த இளம் விஞ்ஞானி’ பட்டத்தையும் பெற்றார்.
ஆன்லைன் துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது 'kindly' என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல ‘டைம்’ இதழ் நடத்திய போட்டியில் 5 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடையே கீதாஞ்சலி ராவ் 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி பாரம்பரியம் மிக்க டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் கீதாஞ்சலி புகைப்படம் இடம் பெற்றது.
கீதாஞ்சலி எழுதிய 'யங் இன்னோவேட்டர்ஸ் கைடு டு STEM' என்ற புத்தகம், உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் STEM பாடத்திட்டமாக பயன்படுத்தப்படுகிறது.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயின்று வரும் கீதாஞ்சலி, ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
ரூ.99.8 கோடி மதிப்பிலான ஏஐ டேட்டா நிறுவனத்தை கட்டமைத்த 16 வயது இந்தியச் சிறுமி!