உங்கள் பிராண்ட் வளர்ச்சிக்கு உதவும் 11 சமூக ஊடக உத்திகள்!
உங்கள் பிராண்ட் நலனுக்காக சமூக ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்கள் ஈடுபாட்டை உண்டாக்கி, பிராண்ட் விழிப்புணர்வை அதிகரித்து, தொழில்முனைவு வெற்றியை அளிக்கும் 11 வழிகளை தொகுத்தளிக்கிறோம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகம், தொழில்முனைவோர்கள் தங்கள் பிராண்டை வளர்த்தெடுப்பதற்கான வலுவான கருவியாக இருக்கிறது. செயல்திறன் மிக்க சமூக ஊடக உத்தி, புதிய வாடிக்கையாளர்களை சென்றடையவும், தற்போதைய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதிய தொடர்பாளர்களை பெறவும் உதவும்.
உங்கள் பிராண்ட் நலனுக்காக சமூக ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்கள் ஈடுபாட்டை உண்டாக்கி, பிராண்ட் விழிப்புணர்வை அதிகரித்து, தொழில்முனைவு வெற்றியை அளிக்கும் 11 வழிகளை தொகுத்தளிக்கிறோம்.
பிராண்ட் வளர்ச்சிக்கு உதவும் 11 சமூக ஊடக உத்திகள்
பிராண்ட் அடையாளம்
சமூக ஊடக உலகிற்குள் நுழைவதற்கு முன், உங்கள் பிராண்ட் அடையாளத்தை வரையரை செய்து கொள்வது அவசியம். உங்கள் ஆதார மதிப்புகள், இலக்கு வாடிக்கையாளர்கள், விற்பனை அம்சம், ஒட்டுமொத்த நோக்கம் ஆகியவற்றை மனதில் கொள்ளுங்கள். வலுவான பிராண்ட் அடையாளம், சமூக ஊடக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக அமைந்து, அனைத்து விதமான மேடைகளிலும் சீரான உள்ளடக்கத்தை உருவாக்க உதவும்.
சரியான மேடை
எல்லா சமூக ஊடக மேடைகளும் சமமாக உருவாக்கப்பட்டதல்ல. ஒவ்வொரு சமூக ஊடக மேடையின் பயனாளிகளை ஆய்வு செய்து, உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிராண்டிற்கு ஏற்ற மேடையை தேர்வு செய்யவும். உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும் தன்மை கொண்ட மேடைகளில் கவனம் செலுத்தவும். தரமான ஈடுபாடு மிக்க உள்ளடக்கத்தை உருவாக்கவும்.
உள்ளடக்கம் தான் ராஜா
சமூக ஊடகம் என வரும்போது, தரமான உள்ளடக்கத்தை, வாடிக்கையாளர்களை ஈடுபாடு கொள்ள வைக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவது முக்கியம். படங்கள், வீடியோக்கள், இன்போகிராபிக் போன்றவற்றை இணைத்து பயனாளிகள் கவனத்தை கவரவும். உள்ளடக்கம் பகிரப்படுவும் இவை உதவும்.
பயனர் உள்ளடக்கம்
பயனர் உருவாக்கும் உள்ளடக்கம் (UGC) உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு சமூக நிருவனத்தை உருவாக்கிக் கொள்ள சிறந்த வழி. வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவத்தை, பிராண்ட் புகைப்படங்கள், வீடியோக்களுடன் பகிர ஊக்குவிக்கவும். சிறந்த பயனர் உள்ளடக்கத்தை இடம்பெறச்செய்து நம்பகத்தன்மையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
சீரான உள்ளடக்கம்
சமூக ஊடக இருப்பை வலுவாக்க சீரான தன்மை அவசியம். உள்ளடக்க நாட்காட்டியை உருவாக்கி, சீரான இடைவெளியில் உள்ளடக்கத்தை பகிரவும். இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற மேடைகளில் தினம் ஒரு பதிவை வெளியிட திட்டமிடவும். ஃபேஸ்புக், லிங்க்டுஇன் மேடைகளில் வாரம் ஒரு பதிவு தேவை.
ஹாஷ்டேக் உத்தி
ஹாஷ்டேக் மூலம் உங்கள் உள்ளடக்கம் பரவலாக சென்றடைந்து பிராண்ட் விழிப்புணர்வை அதிகமாக்கும். உங்கள் துறை தொடர்பான பிரபலமான ஹாஷ்டேகை கண்டறிந்து பயன்படுத்தவும். உங்கள் உள்ளடக்கத்தை நீர்க்கச்செய்யும் ஹாஷ்டேகை தவிர்க்கவும்.
வாடிக்கையாளர்கள் ஆர்வம்
சமூக ஊடகம் இருவழி பாதையாகும். எனவே, கருத்துகள், கேள்விகள், நேரடி செய்தி மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளடக்கத்தை விரும்பவும். கேள்வி பதில் அமர்வுகளை ஏற்பாடு செய்யவும்.
போட்டியாளர்கள்
உங்கள் போட்டியாளர்கள் சமூக ஊடக செயல்பாடுகள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். இதன் மூலம் போக்குகள், பாடங்களை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உள்ளடக்கம், ஈடுபாடு தன்மை வாடிக்கையாளர் வளர்ச்சியை ஆய்வு செய்து உங்களுக்கான உத்தியை வகுத்துக்கொள்ளவும்.
செல்வாக்காளர்கள் கூட்டு
செல்வாக்காளர்கள் (Influencers) மார்க்கெட்டிங் உங்கள் பிராண்ட் செய்தி வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும். உங்கள் பிராண்டிற்கு ஏற்ற செல்வாக்காளர்களுடன் இணைந்து செயல்படவும். உங்கள் பிராண்டை விளம்பரம் செய்யக்கூடிய உள்ளடக்கத்தை செல்வாக்காளர்கள் உருவாக்குவார்கள்.
உத்தி ஆய்வு
உங்கள் சமூக ஊடக உத்தியை ஆராய சமூக ஊடக புள்ளிவிவரங்களை அடிக்கடி ஆய்வு செய்யவும். ஃபாலோயர்கள் வளர்ச்சி, தொடர்பு விகிதம், விற்பனை அளவு ஆகியவற்றை அறிவதன் மூலம், எந்த உத்தி பயனளிக்கிறது என்பதை அறிந்து மாற்றம் தேவையா என தீர்மானிக்கலாம். உங்கள் ஆய்விற்கு ஏற்ப உங்கள் உத்திகளை அமைத்துக்கொள்ளவும்.
விளம்பரம்
இயற்கையான வளர்ச்சி முக்கியம் என்றாலும், கட்டண விளம்பரங்கள் உங்கள் பிராண்ட் பரவலாக அறிய்யப்பட உதவும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இலக்கு விளம்பர வசதி இருக்கிறது. இவை பிராண்ட் விழிப்புணர்வை அதிகரித்து, இணைய போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு வழிவகுக்கும். சீரான தன்மை, ஈடுபாடு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவை செயல்திறம் மிக்க சமூக ஊடக உத்திக்கான முக்கிய அம்சங்கள்.
இந்த 11 சமூக ஊடக உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் பிராண்டை வலுவாக்கி வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் வலுவான சமூக ஊடக இருப்பை உண்டாக்கிக் கொள்ளலாம். உங்கள் முன்னேற்றத்தை கண்காணித்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு அதற்கேற்ப மாறுதல்களை செய்ய மறக்க வேண்டாம். விடாமுயற்சி மற்றும் படைப்பூக்கம் மூலம், இலக்கு வாடிக்கையாளர்கள் ஈடுபாடு கொண்டுள்ள வலுவான பரவலாக அறியப்படும் பிராண்டை உருவாக்கி கொள்ளலாம்.
ஆங்கிலத்தில்: Nucleus_AI
Edited by Induja Raghunathan